திருப்பூர் மாநகரில் பகுதியில் உள்ள தெற்கு தோட்டம் ஐந்தாவது வீதி விரிவு பகுதியில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் யாகம் காலை 3 மணியில் நடந்து உள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திருப்பூரில் சீரும் சிறப்பாககொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி, சார்பாக தெற்கு தோட்டம் ஐந்தாவது விரிவு பகுதியில் பொறுப்பாளர்கள் கார்த்தி,விஜய், சத்யராஜ்,ராஜ், கருப்புசாமி, வனிதா. லட்சுமி . நிர்மலா, மற்றும் பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலைகள் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அவற்றை தொடர்ந்து, இன்று முதல், நான்கு நாட்களுக்கு, மூன்று வேளை பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்டவை வழங்க உள்ளனர்.
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள.விநாயகர் சிலைகளை கரைக்க திருப்பூர் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சிலைகளுக்கென்று ஒதுக்கப்பட்ட குளத்தில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. திருப்பூர் மாநகரில் மூன்று நாளுக்குப் பிறகு ஹிந்து விசர்ஜனம் ஊர்வலம் நடக்கிறது.
சிலைகளுக்கு பாதுகாப்பாக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி இன்று முதல் மாநகரில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், வழிபாட்டு தலம், முக்கியமான சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விசர்ஜனம் ஊர்வலம் நடக்கும் நாள் வரை என, நான்கு நாட்களுக்கும் அன்றாடம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஊர்வலம் நடக்கும் நாளில், கமிஷனர் தலைமையில், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.