கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி பூஜை
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி பூஜை நிகழ்ச்சி கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ ஆலோசனையின் பேரில் கல்லூரி இணைச் செயலர் ஆர் வசந்தன் கல்லூரியின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த பூஜையில் விநாயகருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இந்நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொறி பிரசாதமாக வழங்கப்பட்டது கல்லூரி பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.