அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அதே போல் இந்த ஆண்டும் கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் வீதியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்பளிப்பாக (இலவசமாக ) களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.விநாயகர் சிலைகளை பெற்று கொண்ட பக்தர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.
மேலும் குடிசை பகுதியில் வாழக்கூடிய பொதுமக்களின் வீட்டிற்கே சங்கத்தின் பொறுப்பாளர்கள் சென்று களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வழங்கினர்.
இந்த விழா ஏற்பாடுகளை சங்கத்துடைய தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனை படி சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், கருணாநீதி, மதியழகன், வெங்கடேசன் , மஹா விஷ்ணு , ரவி , செந்தில் , சரவணன், சக்தி ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் இறுதியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.