எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணமாக வருகை தரும் அன்புமணி ராமதாஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பாமக கூட்டத்தில் முடிவு.
மக்களை பாதிக்கும் எந்தத் திட்டமானாலும் தெற்கே எதிர்ப்பு தெரிவிக்கின்ற ஒரே தலைவர் அன்புமணி ராமதாஸ்
மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளரும் சீர்காழி நகர்மன்ற உறுப்பினருமான வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க நடைபயணம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செப்டம்பர் 12ஆம் தேதியும், 13ஆம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ளது.
இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சி செய்கின்ற மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற ஒரே தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே. அதனால் அன்புமணி ராமதாஸ் கரத்தினை வலுப்படுத்த சீர்காழி மயிலாடுதுறைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாஸுக்கு அனைவரும் திரளாக பங்கேற்று வரவேற்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முருகவேல், கார்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர்