துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூர் நகர 15வது வார்டில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக காவேரி பைப் லைன் போடப்பட்டது.அன்றிலிருந்தே காவிரி குடிநீர் வராமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.இது குறித்து நகராட்சி சேர்மன்,துணைச் சேர்மன்,வார்டு கவுன்சிலர் ஆகியோரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
தின ஓசை நாளிதழ் சார்பாக ஆணையர் வாசுதேவனிடம் தகவல்தெரிவிக்கப்பட்டது.தகவல் தெரிவித்த 12மணி நேரத்தில் பொறியாளர் செந்தில்குமாரை அனுப்பி பைப் லைனை குழிதோண்டி பார்த்தபோது பைப்பின் உள் பகுதியில் மண் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
இதை உடனடியாக சரி செய்து காவிரி குடிநீர் சீராக வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையர்க்கும் பொறியாளருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். தின ஓசை நாளிதழ் சார்பாகவும் நன்றி தெரிவிப்போம்..நல்லதை போற்றுவோம்…
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்