கோவை
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம்,7 வெள்ளி,2 வெண்கலம் உள்ளிட்ட 11 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்ரீலங்காவில் உள்ள கொழும்பில் 3வது சர்வதேச அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கட்டா,குமித்தே என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் கோவையைச் சேர்ந்த ஷிங்கன் ஸ்போர்ட்ஸ் கராத்தே மையத்தை சேர்ந்த ஐந்து வயது குழந்தை உட்பட 7 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதில் இரண்டு தங்க பதக்கம்,7 வெள்ளி பதக்கம்,2 வெண்கலம் பதக்கம் உள்ளிட்ட 11 பதக்கங்கள் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இந்நிலையில் பதக்கங்களை பெற்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அரசு சார்பில் மாவட்ட முழுவதும் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டுப் போட்டியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் கராத்தேவை இடம் பெற செய்ய வேண்டும் என உலக கராத்தே நடுவர் கணேசமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.