திருவெற்றியூர்.
திருவொற்றியூர், கே.வி.கே., குப்பத்தில், பிரசித்திப் பெற்ற படவேட்டம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடிமாதம் அம்மனுக்கு பால் குடம் ஊர்வலம் அபிஷேகம் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக விடை பெறுவது வழக்கம்
மீனவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் எல்லை தெய்வமான படவேட்டம்மன் ஆலயத்தில் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் தொழில் சிறக்கவும் அனைவருக்கும் நோய் நொடியின்றி இன்புற்று வாழவும் பெண்கள் விரதம் இருந்து ஆண்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்
அதன்படி, இவ்வாண்டு, கூழ் வார்த்தல் திருவிழா, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பதி அலங்கரித்தல் நிகழ்வுடன் துவங்கியது. இந்த வருடம் அம்மனுக்கு, உடுக்கை பம்பை கரகாட்டம் மங்கள வாத்தியம் மேளதாளம் முழங்க விரதம் இருந்த பக்தர்கள், காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பொன்னியம்மன் கோவிலில் இருந்து, கே வி கே குப்பம் படவேட்டம்மன் உற்சவ தாயார் பிரமாண்ட மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். விரதம் இருந்த பக்தர்கள் உடன், 508 பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், காவடி சுமந்தும் அணிவகுத்தனர். மேலும், அலகு வேல், ராட்சத வேல், கூண்டு வேல் அணிந்தும் ஊர்வலம் துவங்கியது.
படவேட்டம்மன் கோவில் தர்மகர்த்தா, திருவொற்றியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி சங்கர் தலைமையில், ஊர்வலமானது, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, விம்கோ நகர் மார்க்கெட், சக்திபுரம் பிரதான சாலை வழியாக, சுமார் மூன்று கிலோமீட்டர் கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
பின், உடுக்கை பம்பை மங்கள வாத்தியம் மேளதாளம் முழங்க கூழ்வார்த்தல் சொக்கலிங்கம். லயன் சங்கர். நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கூழ் பிரசாதத்தை வாங்கி சென்றனர்.