கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து தொடர்ந்து மூன்று தினங்களாக அதிகரித்துக் கொண்டு உள்ளது.
நேற்றுவரை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ரம்மியமாக கொட்டி செல்கிறது. இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.