செய்தியாளர் மரியான் பாபு
விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் அமெரிக்கா சார்ந்த குளிர்பானங்களை
சாலையில் ஊற்றி கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி தொழிலாளர் அணியின் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுடர்வளவன் தலைமையில் நடைபெற்றது.

கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.இதில் அமெரிக்காவுக்கு துணை போகும் ஒன்றிய அரசை கண்டித்தும்,அமெரிக்கச் சார்ந்த வெளிநாட்டு குளிர்பானங்களை பெரியார் சிலை முன்பு சாலையில் ஊற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. அதாவது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பல பொருட்களுக்கு இந்த வரியை விதித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்னதாக இந்தியா மீது 25% வரி விதித்திருந்தது. ஆனால், ஆகஸ்ட் 6ஆம் தேதி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்குக் கூடுதலாக 25% வரி அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியாவின் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதிகளைப் பாதிக்கும். இந்தியாவிலுள்ள பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
அதனை கண்டித்து கண்டன கோசம் எழுப்பி சாலையில் அமெரிக்க சார்ந்த வெளிநாட்டு குளிர்பானங்களை ஊற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
உடன் மண்டல துணைச் செயலாளர் ராஜா, பாராளுமன்ற செயலாளர் துரை செந்தில், மாவட்ட பொருளாளர் சதீஷ்,மாநகர செயலாளர் முரளி, முன்னாள் மாவட்ட,மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அமைப்பாளர் லோகு, கரூர் ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, வடக்கு நகர செயலாளர் அருள், ஜெயக்குமார், ரகுமான் மற்றும்
நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.