சமூக சேவையில் டாக்டர் பட்டம் பெற்ற ஆலத்துடையான்பட்டி சமூக சேவகர் அஷ்ரஃபீ-க்கு பாராட்டு விழா

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த சமூக சேவகர் டாக்டர் அஷ்ரஃபீ-க்கு துறையூர் லக்கி மஹாலில் பாராட்டு விழா நடைபெற்றது. தாருல் மஹப்பா ஆர்ஃபனேஜ் டிரஸ்ட் ஆரம்பித்து ஆதரவற்றோர்களை மீட்டு உண்டு உறைவிடம் வழங்கி பாதுகாத்து வரும் அஷ்ரஃபீ சமூக சேவைகளால் திருச்சி சேவை நாயகன், கலைமாமணி,சேவை ரத்னா,மனித நேய மாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.சமூக நலத்துறையால் 2025 ஆம் ஆண்டு தென்னிந்திய அளவில் 10 நபர்களில் ஒருவராக டாக்டர் பட்டம் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த சமூக சேவகர் ஸீஃப்யான்ஹான் அஷ்ரஃபீ க்கு அவரின் சமூக சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் ந.முத்து செல்வன்,அர.ந.அசோகன் மற்றும் அவரின் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு பாராட்டி பேசினார்கள்.இதில் இஸ்லாமிய சொந்தங்கள், உறவினர்கள்,ஆசிரியர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *