கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் 28 வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் நாள் ஆண்களுக்கும், இரண்டாவது நாள் பெண்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில் ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் மற்றும் பொது பிரிவினர் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 750 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியானது 10, 12, 14, 16, 18 ,20 மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியலில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை மாநில தடகள சங்க தலைவர் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் பெருமாள், பொருளாளர் செல்வராஜ் மற்றும் தடகள சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் 39வது இளையோருக்கான மாநில தடகள போட்டியில் தகுதியின் அடிப்படையில் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.