திருவொற்றியூரில் இயங்கி வரும் டயர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை பணிபுரியும் 61 பயிற்சி தொழிலாளர்கள், கடந்த 7 வருட காலங்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பயிற்சி தொழிலாளர்கள் 61 பேரை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சங்க தலைவர் எழில் கெரோலின் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம். திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவில் உள்ள தொழிற்சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.
காலை 6 மணிக்கு பட்டினி போராட்டம் துவங்கிய இந்த பயிற்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்கள், மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து தொழிலாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள் உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
மாலை 5 மணிக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன்,கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் பட்டினி போராட்டத்தில் கலந்து கொண்டு பயிற்சி தொழிலாளர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும் என தனியார் நிறுவனத்தை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
பின்னர் ஜூஸ் கொடுத்து ஒரு நாள் போராட்டத்தை முடித்து வைத்தனர். அப்போது தங்களது கோரிக்கை நிறைவேற்ற படவில்லை என்றால் போராட்டத்தை தொடர்வோம் எனவும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.