ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுபவர் இடைநிலை ஆசிரியர் சி.கிருஷ்ணமூர்த்தி. இவர் 2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானார்.
இதனை தொடர்ந்து சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு ராமசாமிபட்டி கிராமத்தில் இருந்து ஆள் உயரம் மாலை, கிரீடம் அணிவித்து மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் மாணவ மாணவிகள் இசைக்கேற்றவாறு ஆட்டம் போட்டு வாழ்த்து சொல்லி, பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இது மாணவ மாணவியர் கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர் இதைத்தொடர்ந்து ராமசாமிபட்டி கிராம பொதுமக்கள் சார்பிலும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் சார்பிலும் நல்லாசிரியர் கிருஷ்ணமூர்த்திக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது