எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டு பாடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை பாட்டு பாடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 3.5 லட்சம் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 2000 ஆக உள்ள பென்ஷன் தொகையை ரூ.6750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
இல்லையென்றால் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ரூ.3850 பென்ஷனையாவது வழங்க வேண்டும். பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ,எம்பிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளுக்கும், கிராமப்புற கோவில் பூசாரிக்கு பென்ஷன் அதிக அளவு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இதுவரை பென்ஷன் தொகை உயர்த்தவில்லை எனக்கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்