புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள வக்ஃபு வாரிய நியமனங்கள் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எதிரான ஒன்றாகும் .இந்த நியமனத்தை ரத்து செய்து சமூக நீதி வழங்கிட வேண்டும்.


புதுவை மாநில திமுக துணை அமைப்பாளர் அனி பால்கென்னடி எம் எல் ஏ பாஜக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கண்டனம்.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முஸ்லிம் விரோத வக்ஃப் சட்டத்தை அமல்படுத்தி புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு அச்சமுதாய மக்கள் இடத்தில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியில் கடந்த 11 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த வக்ஃப் வாரியத்தை, தற்போது தேர்தல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக அமைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த நியமனத்தால் பேராபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு அமுல்படுத்திஒரு வரலாற்று கரும்புள்ளியினை பதிவு செய்திருக்கிறது.

வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம் அல்லாத இரு நபர்களை வாரியத்தில் இணைத்த இந்தியாவின் முதல் மாநிலம் என்ற தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி அதன் விளைவுகளை சந்திக்கின்ற ஒரு மோசமான வரலாற்று நிகழ்வினை புதுச்சேரி பெற்றுள்ளது.

இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நியமனமானது புதுச்சேரி அரசு சுதந்திரமாகச் செயல்படவில்லை என்பதையும், அது முழுமையாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பதையும் அப்பட்டமாக உணர்த்துகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் பாஜகவின் பரிசோதனைக்கூடமாகப் புதுச்சேரி மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது.

வக்ஃப் வாரியத்தில் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களை திட்டமிட்டு நுழைத்திருப்பது இஸ்லாமிய மக்களிடையே பெரும் பயத்தையும், பதட்டத்தையும், ஒருவித கொந்தளிப்பையும் உருவாக்கி இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களைத் திணிப்பது சமூக அமைதியைக் குலைக்கும் செயலாகும்.
சமூக நீதிக்கு எதிரானது

இஸ்லாமிய அறக்கட்டளைச் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரு புனிதமான வாரியத்தில், அந்த சமூகத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை அமர்த்துவது வக்ஃப் வாரியத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்.

மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக, சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனங்களை இந்த அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான அரசு பள்ளியினை அரசின் முன் அனுமதியின்று இடித்து தரைமட்டம் ஆக்கியவர்கள் எல்லாம் இந்த வாரிய நியமனத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம் சமுதாய மக்களிடத்தில் எழுந்த கொந்தளிப்பினை அடுத்து அந்த நபர்களை எல்லாம் நீக்கிய பிறகு அவர்களும்இந்த நியமனத்தில் இடம்பெறுவது முஸ்லிம் விரோத செயலாகும். இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு, தகுதியான நபர்களைக் கொண்டு வாரியத்தை மறுசீரமைக்க வேண்டும் இன்று ஆளும் அரசுக்கு கோரிக்கை விடுப்பதோடு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *