திருநாகேஸ்வரத்தில் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கப் பேரவை நடத்திய திங்கள் கவியரங்கம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கப் பேரவை நடத்திய திங்கள் கவியரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியை புலவர் ச.மதிவாணன் தலைமையேற்று நடத்தினார், விழித்தெழு இளைஞனே என்ற தலைப்பில் புலவர் குஞ்சித. சுகுமார், புலவர் இளைய தீபன் மகாலிங்கம், புலவர் கு. செல்லதுரை, புலவர் சோ. மோகன், பாவலர் சண்முகம், வாஞ்சிலிங்கம் கவிஞர் கோமதி, திருத்துறைப்பூண்டி மருத்துவ மாணவர் அபிநிவேஷ், கவிஞர் ஆடுதுறை துரைராஜ், கவிஞர் சாவித்திரி, கவிஞர் தீபா, கவிஞர் அருணா சூர்ய குமார், கவிஞர் ரா.ச. பத்மநாபன், கவிஞர் பிச்சை மாணிக்கம், எழுத்தாளர் சூர்ய குமார், கவிஞர் இராம. வேல்முருகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்களின் கவிதை நாடகம் நடைபெற்றது. கவிஞர் சோ. மோகன் அனைவரையும் வரவேற்று பேசினார், கவிஞர் சுகுமார் மீனாட்சி நன்றி கூறினார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர் தமிழ்ச் செம்மல் இராம. வேல்முருகன் சிறப்பாக செய்திருந்தார்.