புதுச்சேரி, மார்ச் 6: புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தெப்பக்குளத்திற்கு நகராட்சி மூலம் பாதுகாப்பு கிரில், நடைபாதை மற்றும் ஒளி அமைப்பு செய்வதற்கான பணிகளின் துவக்க விழாநடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி (2023–24) திட்டத்தின் கீழ் ரூ.19,13,243/- மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளுக்கு, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி. வைத்திலிங்கம் அவர்கள் தலைமையேற்றார்.
இந்த பணிகளை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் துவக்கி வைத்தார். இப்பணிகள் நான்கு மாதங்களில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தெப்பக்குளத்திற்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் கிரில் அமைத்தல், பொதுமக்கள் சுலபமாக நடந்து செல்ல நடைபாதை அமைத்தல் மற்றும் சுற்றுப்புறம் ஒளிவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணிகளை புதுச்சேரியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜே. இளங்கோவன் மேற்கொள்கிறார்.
நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், பஞ்சாயத்தாரர்கள், ஊர் பிரமுகர்கள், கழக நிர்வாகிகள் சகோதரர்கள், கூட்டணி கட்சி தோழர்கள் , பொது மக்கள் உடன் இருந்தனர்.