திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், அன்னுக்குடி ஊராட்சியில் உள்ள வடலூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மயான சாலை இல்லாத காரணத்தால் கடந்த 14- ந்தேதி இறந்த பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக 15- ந்தேதி அடக்கம் செய்வதற்கான அவல நிலையில் முயற்சி செய்து சாலை மறியல் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் எல்லாம் அழைத்து கோரிக்கை வைத்து, கோரிக்கை நிறைவேற்ற வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார், மண்டல வட்டாட்சியர் ரவி, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையான குழுவும், காவல் துறை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், கிராம முக்கியஸ்தர்கள்
பங்கு கொண்ட பேச்சு வார்த்தை மூலம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேரும், சகதியும் இருக்கும் காலத்தில் செல்வது, நடவு நட்டு பயிராக இருக்கும் பொழுதும் அதில் நடந்து செல்வது, நல்ல நெல் உற்பத்தி வந்த பிறகும் அதில் நடந்து செல்வது என நடைமுறையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மலர்கொடி என்ற பெண் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். அவரை அந்த மயான பாதையில் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு கிராமத்தின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜ், திருவாரூர் மாவட்டக் குழு உறுப்பினர் த. ரங்கராஜன், வலங்கைமான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சேகர், வலஙகை ஒன்றிய துணை செயலாளர் கே.செல்வராஜ், அமமுக செயலாளர் பசுபதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலங்கை நகர செயலாளர் பி.ராதா, கிளை செயலாளர்கள் ஐயப்பன், சதீஷ், ரகுபதி, பிரபாகரன், சிலம்பரசன் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையில் இறுதியில் உடனடியாக சாலை செப்பனிடப்பட்டு கொடுக்கப் பட்டது.
அதன் பின்னர் அக்கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுமார் 100 ஆண்டு கால மயான சாலை பிரச்சினை ஒரு நாளில் முடிவுக்கு வந்தது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகாரிகளையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரையும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.