திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ் சங்கம் சார்பில் பாரதியும் பைந்தமிழும் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் எஸ்ஆர்எம் கணினி மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எ.தேவா, இரா.நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் இரா.பாஸ்கரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் புலவர் வேணு.அரங்கநாதன் பங்கேற்று, ‘பாரதியும் பைந்தமிழும்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் பாரதியின் தமிழ் பற்றியும், நாட்டுப் பற்றையும் பற்றி விவரித்து பேசினார். பாரதியார் குறித்த பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்வில் சங்க நிர்வாகிகள் ஆ.முரளி, ஸ்ரீமாந்த், கு.சதானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வை துணைத் தலைவர் பா. சீனிவாசன் தொகுத்து வழங்கினார். முன்னதாக செயற்குழு உறுப்பினர் இரா.அருண்குமாரின் பாரதியார் பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி, இயக்குநர் ஆதிநாதன், கல்வித்துறை ஜெயக்கண்ணு உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா சீனிவாசன், வந்தவாசி.