திருச்சி சிறுகனூர் அருகே காரில் சென்ற தங்க நகை வியாபாரியை மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி தாக்கி, 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். சமயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கைமாறி கை மாறி சென்றுள்ளதாகவும், இது சங்கிலித் தொடர் போல கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.