தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்: மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் ஐப்பசி ஸ்வாதி திருநட்சத்திரத்தை ஒட்டி வியாழக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்று.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், நகராட்சிக்கு உட்பட்ட குளத்து புஞ்சை தெரு, ஆர்.எஸ்.பி.நகர் பகுதியில் உள்ள மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் ஐப்பசி ஸ்வாதி திருநட்சத்திரத்தை ஒட்டி வியாழக்கிழமை ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முதலில் அகண்ட மஹாமந்திர நாம கீர்த்தனம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் ஸத்ஸங்க அனுபவங்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து குரு மஹிமை ப்ரவசனம் நடந்தது. இந்நிகழ்ச்சிகளை ஸ்ரீ ஸ்வாமிஜியின் சீடர்கள் ஸ்ரீ முரளி ஜி மற்றும் ஸ்ரீ சுதர்சன் பாகவதர் ஒருங்கிணைத்தனர்.
பின்னர் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு, மஹாபிரசாதமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது.
சீடர்கள் தெரிவித்ததாவது:
ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாபிஜியின் நாமத்வார் என்ற ப்ராத்தனை மையங்கள்,தமிழ்நாடு மற்றுமின்றி வெளிநாடுகளிலும் உள்ளது, அனைத்து மக்களும் இக்கலியுகத்தில் மன அமைதி பெறவும், சுபிட்சமாக வாழவும், பிறவா நிலை அடையவதற்கும் ஏற்ற சுலபமான வழி பகவான் நாமம் ஒன்றே – என்பதை பாகவத தர்மர்மத்தின் வழியில் உபதேசம் செய்து வருகிறார்.
பகவான் திரு நாமங்கள் எண்ணற்று இருந்தாலும் இந்த மஹமந்ரமான ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஒன்றே போதும் என அருள்கின்றார்..
பகவான் நாமத்தை யார் ஒருவர் நம்பிக்கையுடன் விடாமல் சொல்லி வருவார்களேயானால் அவர்கள் ப்ரார்த்தனைகளை சுலபத்தில் நிறை வேற்றி வைப்பான் – “கண்ணன்”…கலி சந்தரண உபநிஷத்திலும் குறிப்பிட்டுள்ளபடி,
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே என் மகா மந்திர நாம கீர்த்தனமே சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு ஆனந்த நிலையை அடைய மிக எளிய வழி என சுவாமிஜியின் பக்தர்கள் தெரிவித்தனர்…