திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த சரஸ்வதி, 2010 ஆம் ஆண்டு அஞ்சலக சிறுசேமிப்பு முகவர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரியான திலகமணி ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திலகமணியை சிக்க வைத்தார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி திலகமணிக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மண்ணை
க. மாரிமுத்து.