பொம்மிடியில் திமுக முப்பெரும் விழாவையொட்டி மாபெரும் ரத்ததான முகாம்-50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குருதி கொடை வழங்கினர்.
திமுக முப்பெரும் விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் பொம்மிடி அப்துல் கலாம் நகர் கிளை சார்பில், வடசந்தையூர் அரசு தொடக்கப்பள்ளியில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த ரத்ததான முகாமினை திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த ரத்ததான முகாமில் பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திமுக இளைஞர் அணியினர் மற்றும் இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.
இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கிய இளைஞர்களுக்கு, அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் அ.சத்தியமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் வட்டார மருத்துவ அலுவலர் கௌரிசங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.