கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது
மருத்துவர் பாபு லட்சுமணன் பணியாளர்களின் சேவைகள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் வழங்கினார் முன்னதாக வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆஷா பணியாளர்களுக்கு திமுக நகர கழகத்தின் சார்பாக சமபந்தி விருந்து வழங்கப்பட்டு பணியாளர்களுடன் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது வெகுசிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆஷா பணியாளர்களும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்