பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திகாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மாநில கூட்டுறவுப் பிரிவு தலைவர் சுசீந்திரன் மற்றும் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகநாதன் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
பாஜக கமுதி ஒன்றிய தலைவராக பணியாற்றியபோது மக்கள் சேவையில் சிறந்து விளங்கி மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றவர்.அவர், தன்னுடன் பயணிக்கும் அனைத்து தொடர்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவு தரும் உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்ததும் குறிப்பிடத்தகுந்தது.