இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி, தனது சிறப்பான “பெஸ்டிவ் ட்ரீட்ஸ்” பண்டிகை கால சலுகைத் திட்டத்தை கோவையில் அறிமுகப்படுத்தியது. கோவை ராஜவீதி 2-வது கிளையில் நடைபெற்ற இவ்விழாவில் வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த திட்டம் மூலம் வீட்டு, கார், இருசக்கர வாகன மற்றும் தனிநபர் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள், விரைவான செயல்முறை, கிரெடிட் கார்டுகளில் கூடுதல் ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக், சிறப்பு இஎம்ஐ வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும் மின்னணு சாதனங்கள், நகைகள், ஆடைகள், பயணம், தினசரி பொருட்கள் போன்ற துறைகளில் பங்குதாரர் நிறுவனங்களுடன் இணைந்து கூடுதல் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. டிஜிட்டல் வங்கி சேவைகள் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
“பண்டிகைக் காலம் எப்போதும் மகிழ்ச்சி மற்றும் பர்ச்சேசிக்கான நேரமாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் கனவுகளை எளிதாக நிறைவேற்ற உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.
கோவையில் தொடங்கியுள்ள இந்த சலுகைகள், தமிழகமெங்கும் உள்ள எச்டிஎப்சி வங்கிக் கிளைகளிலும் ஆன்லைன், மொபைல் பேங்கிங்
app-களிலும் கிடைக்கின்றன.