கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு..

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு கடந்த மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான பென்காசிலாட் விளையாட்டு போட்டிகளில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிச்சாஸ் அகாடமி வீரர், வீராங்கனிகள் 15 பேர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய 12 வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான பேட்டிகள் தங்கம் வென்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் செப்டம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் கோபால் பகுதியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த வீரர்கள் வெற்றி பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பெற்றோர்கள் வாழ்த்தி வழி அனுப்பினார்கள்.
உலகளவில் போட்டிகள் 20 ஆம் நூற்றாண்டில் பென்காக் சிலாட்டை முதன்முதலில் பயிற்சி செய்யத் தொடங்கிய இந்தோ-டச்சு யூரேசியர்கள் [15] 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு நோக்கி கலையைப் பரப்பினர்.

இன்று பென்காக் சிலாட் இந்தோனேசிய பள்ளிகளில் கற்பிக்கப்படும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். இது SEA கேம்ஸ் (தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்) மற்றும் இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு வாரம் (பெக்கான் ஓலாஹ்ரகா நேஷனல்) போன்ற உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச தடகள நிகழ்வுகளில் ஒரு போர் விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது.

2012 முதல், பென்காக் மாலியோபோரோ விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய சிலாட் பள்ளிகளால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஹாலிவுட் பிளாக்பஸ்டர் ஜான் விக் 3 இல் இந்த கலை முக்கியமாக இடம்பெற்றுள்ளது,

இந்த பெண்காசிலாட் போட்டி என்ற தற்காப்பு கலையான கராத்தே குங்பூ போன்ற ஒரு வகையான தற்காப்பு கலை.இந்தப் போட்டியில் கிராமப்புறங்களில் இருந்து பல்வேறு ஏழை எளிய குடும்பங்கள் சார்ந்த மாணவர்கள் பங்கேற்று உள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் விளையாட்டு துறையில் முக்கியத்துவம் பல்வேறு வீரர்களை பாராட்டி வருகின்றனர். அதேபோல் தேசிய அளவில் தேர்வாகிய மாணவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கவேண்டும் அரசு கூடுதல் திட்டங்களை சலுகைகள் வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர் வீரமணி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
கரூர் மாவட்டத்திற்கு வாய்ப்பு அளித்த பொகாஸ் சிலாட்
மாநில செயலாளர் G.P மகேஷ்பாபுக்கு கரூர் மாவட்டம் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *