தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிரதான நுழைவு வாயில் கட்டப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் பழமையான நிலையில் கேரளவிற்கு அதிக அளவில் எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களினால் நுழைவாயில் பகுதியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக நுழைவாயிலானது பலத்த சேதம் அடைந்து எப்போது விழும் என்ற நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று செங்கோட்டை நகர்மன்ற தலைவி ராம லெட்சுமி தலைமையில் திமுக உறுப்பினர்கள் ஒருமனதாக வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறை தீயணைப்பு துறை ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 6:00 மணி அளவில் நுழைவாயிலானது ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது
இந்த நிகழ்விற்காக முழு வீச்சில் செயல்பட்ட திமுக நகர மன்ற உறுப்பினரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எஸ் எம் ரஹீம் உள்பட ஏராளமானவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக நன்றி தெரிவித்துக் கொண்டனர் ஆபத்தான நிலையில் இருந்த இந்த வளைவானது இப்போது அகற்றப்பட்டது
வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த வளைவானது கேரள திருவிதாங்கூர் சமஸ்தானம் அரசால் கட்டப்பட்ட நுழைவு வாயில் என்பது குறிப்பிடத்தக்கது மொழிவாரியாக பிரிக்கப்பட்ட இடங்களில் செங்கோட்டை பகுதிகள் ஆரம்பத்தில் கேரள மாநிலத்தோடு இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது புளியரை கோட்டைவாசல் வரை தமிழக எல்லையானது விரிவடைந்ததுள்ளது.