போடிநாயக்கனூர் அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் வழங்கப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக 50. க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தேனி எம்பி. தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனடி தீர்வாக 50 க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முகாமில் பங்கேற்ற கர்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பொதுமக்களுக்கு வழங்கினார்.
தேனி அரூகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் இங்குள்ள சீனி பூசாரி திருமண மண்டபத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ் அய்யனார் தலைமையில் நடைபெற்றது இந்த முகாமில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் கிழுக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.ஜயப்பன் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ் அய்யனார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர் மேலும் இந்த முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனடி தீர்வாக புதிய வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ் அய்யனார் ஆகியோர் வழங்கினார்கள் . இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் வினோத் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்