திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சி நரிக்குடி கிராமம் மற்றும் ஆலங்குடி ஊராட்சி காமராஜர் நகர், சித்தன்வாழுர் ஊராட்சி தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அளித்த குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகள் கட்டப்படாமல் நிலுவையில் இருந்ததை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, மழைக்காலத்திற்கு முன்னதாக வீடுகளை கட்டி முடித்திட அறிவுறுத்தினார்.
அதனை அடுத்து ஆலங்குடி ஊராட்சியில் ரூ.52.63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, பேறுகால பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை அறை, கர்ப்பபை வாய் புற்றுநோய் அறுவை சிகிச்சை அரங்கம், ஆய்வகம் போன்றவற்றை தீடீரென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைக்காலங்களில் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருவோணமங்கலம் ஊராட்சியில் ரூ.17.61 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், சாரநத்தம்- கொக்கலடி – மாத்தூர் வழியாக 6.85 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலையினையும், சித்தன் வாழுர் ஊராட்சி குச்சி பாளையம் கிராமத்தில் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீட்டினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிமாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்று வரும் காலாண்டு தேர்வினை பார்வையிட்டு தேர்விற்கு மாணவ, மாணவியர்கள் தவறாது வருகை புரிவது குறித்து ஆசியர்கள் இடம் கேட்டறிந்தார்கள்,
தொடர்ந்து கண்டியூர் ஊராட்சி, நரசிங்க மங்கலம் கிராமத்தில் அமையப்பெறவுள்ள வட்டார நாற்றங்கால் இடத்தினையும், அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவு மற்றும் மதியம் வழங்கப்படும் உணவுகள் குறித்து அங்கன்வாடி மைய பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இவ் ஆய்வில் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, ரமணி, உதவி பொறியாளர்கள் சுகந்தி, ரகு குமார், பணி மேற்பார்வையாளர்கள் மோகன் குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.