தாராபுரம் செய்திகள் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை குண்டடம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த வேங்கிபாளையம் அருகே உள்ள ஜோதியும்பட்டியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடோனில் விற்பனைக்காக பட்டாசுகள் பாதுக்கி வைத்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் குண்டடம் போலீசார் மற்றும் தாராபுரம் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது சுமார் 88 பெட்டிகளில்
பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த தெரிய தெரியவந்தது.
இதனை அடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்து போலீசார் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி பட்டாசு குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பட்டாசு பெட்டிகளை பதுக்கி வைத்திருந்த கணேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.