பெரியகுளம் அருகே முதலக்கம்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சியில் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இங்குள்ள முதலக்கம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் இராகவன் கிராம ஊராட்சி தலைமையில் நடைபெற்றது
இந்த முகாமில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்தரிகா பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்கள் வழங்கிய மனுக்களுக்கு உடனடி தீர்வாக புதிய வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் .
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை முதலக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் வீரபத்திரன் கீழ வடகரை ஊராடசி செயலாளர் லெனின் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்