பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை புறக்கணித்தும்,
மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்ப்பந்தம் செய்வதை உயர் அலுவலர்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் வட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தின் பாபநாசம் வட்டத் தலைவர் வரதராஜன், மத்திய செயற்குழு உறுப்பினர் பிராங்கிளின் , வட்ட செயலாளர் ரகுராமன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் பாக்கியராஜ், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அனைத்து காலி பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..