கோவை

கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து 8 வது பன்னாட்டு கருத்தரங்கம்..

கோவை கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு சார்பில் வெள்ளி விழாவை சிறப்பிக்கும் வகையில் கணிப்பொறித் துறைகளின் ARTIFICIAL INTELLIGENCE AND EMERGING TECHNOLOGIES – ICAIET 2025 தலைப்பில் அமைந்த எட்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குக் கணிப்பொறித் துறைத்தலைவர் முனைவர் ந. ரஞ்சித் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் ஸ்ரீமதி கே.எஸ். கீதா அவர்கள் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்விற்கு லண்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர், பேராசிரியர் முனைவர் வி. அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துறையில் ஏற்பட்டுள்ள தற்கால வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தேவைகளை எடுத்துரைத்தார்.

செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், திறன்சார் அணுகுமுறைகள், செயற்கை நுண்ணறிவைக் கையாள்வதில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் அவற்றைக் கண்டறிவதற்கான உத்திகளை இக்கருத்தரங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார். இதில் 50 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 125 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு மலராக வெளியிடப்பட்டது. இக்கருத்தரங்கத்தில் கல்லூரியின் இயக்குனர் முனைவர் பா. குணாளன், துணை முதல்வர் மா. பாஸ்கரன் பல்வேறு துறைகளின் துறைத்தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் கலந்து கொண்டனர். கணிப்பொறித்துறைத் தலைவர்கள் திரு ந. சிவகுமார் மற்றும் முனைவர் க. சுகேந்திரன் ஆகியோர் கருத்தரங்கத்தினை ஒருங்கிணைத்தனர்.

பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *