கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “கரிஷ்மா” 2025 கலைத்திறன் போட்டியில் பிரபல ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்..
கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவ,மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் கரிஷ்மா எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது…
இதன் ஒரு பகுதியாக கரிஷ்மா 2025 கலை நிகழ்ச்சி போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது விழாவை பி.எஸ்.ஜி.ர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியின் செயலர் யசோதா தேவி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்..
விழாவில் பிரபல ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 4 மற்றும் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களும் பின்னனி பாடகர்களுமான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ராஜகணபதி மற்றும் ராஜில்ராஜ் கேரளாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் ராஜில் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..
இதில், கோவை,ஈரோடு,திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் கரிஷ்மா நிகழ்வாக நடைபெற்ற இதில், ஓவியம்,புகைப்படம் எடுத்தல், பட கவிதை விளம்பரப் படப்பிடிப்பு வினாடி வினா, குழு மற்றும் தனி நடனம், இசைக்குழுக்களுக்கான போட்டி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன…
இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கல்லூரி முதல்வர் ஹாரத்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் மேடையில் பாடியும் ஆடியும் பார்வையாளர்களை உற்சாகபடுத்தினர்..
இவ்விழாவின் இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் பி .பீ. ஹாரத்தி மற்றும் சிறப்புவிருந்தினர் புவியரசு இணைந்து போட்டி முடிவுகளை அறிவித்தனர்.
இதில்,’கரிஷ்மா சர்வஸ்ரேஷ்ட – கரிஷ்மாவின் சிறந்தவர்’, என்ற பட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைகழகத்தில் பயிலும் கார்த்தி,என்ற மாணவருக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது கரிஷ்மா பட்டத்தை விஎல்பி ஜானகியம்மாள் கல்லூரி மாணவர் விஷ்ணுரத்திஷ், மற்றும் மூன்றாவது கரிஷ்மா பட்டத்தை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர் லக்ஷன்,ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பல்வேறு மேடை மற்றும் மேடைக்கு வெளியேயுள்ள நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வெற்றியாளருக்கு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசு, தனிப்பட்ட கோப்பை மற்றும் ரோலிங் கோப்பை வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.