காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்
காங்கயத்தில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுராதா, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஊராட்சி செயலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பால்வினை நோய்த் தொற்று மற்றும் ஹெச்ஐவி தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், ஹெச்ஐவி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஒதுக்கி வைத்தல் கூடாது, அலுவலகத்திலோ தொழிலகத்திலோ பள்ளி கல்லூரிகளிலோ குடும்பத்திலோ அவர்களை ஒதுக்கி வைத்தல் கூடாது, மேலும் அரசுத் திட்டங்களில் அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை உண்டு என்பது குறித்து அரசு மருத்துவமனையின் சுகவாழ்வு மைய ஆலோசகர் கருப்புசாமி விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூர்த்தி, தேவராஜ், காசநோய் மேற்பார்வையாளர் ஜெகதீஸ் மற்றும் காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சி செயலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.