கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட், பங்களா டிவிசன், கள எண். 13, தேயிலைத் தோட்டப்பகுதியில் சரக களப்பணியாளர்களால் ரோந்துப்பணி மேற்கொண்ட பொழுது 26.06.2025 அன்று சுமார் – 2 ½ வயது மதிக்கதக்க பெண் காட்டுயானைக் குட்டி ஒன்று இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
26.09.2025 நேற்று மாலைப் பொழுதானதால் தொடர்ந்து 27.09.2025 இன்று காலை 11.00 மணியளவில் துணை இயக்குநர் தலைமையில், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர், சரக தனிப்பணி வனவர், சரக தனிப்பணி வனக்காப்பாளர், தன்னார்வலர் என்சிஎஃப் கணேஷ்ரகுநாதன், எஸ்டேட் மேலாளர் ஆகியோர் முன்னிலையில் இணை இயக்குநர் சகாலா பாபு, கால்நடை பராமரிப்பு துறை, கோவை, வனக்கால்நடை மருத்துவர். வெண்ணிலா, உதவி கால்நடை மருத்துவர்கள் மகாலட்சுமி, கோமங்கலம், முகமது சுல்தான் நசிர், வால்பாறை (பொறுப்பு) ஆகியோர்களால் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.
உடற்கூறு பரிசோதனைக் குழுவினர்களின் ஆலோசனைப்படி காட்டுயானையின் உடல் சம்பவ இடத்திலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது இத்தகவலை மானாம்பள்ளி வனச்சர அலுவலர் கிரிதரன் தெரிவித்துள்ளார்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்