போடிநாயக்கனூரில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அலங்காரத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ னிவாச பெருமாள் கோயில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி விசேஷ கவசம் அலங்காரம் செய்யப்பட்டு பக்கர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார்
புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த மாதமாகும் இந்த மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்தால் பணம் கொட்டும் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் இந்த திருநாளை யொட்டி சீனிவாச பெருமாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உட்பட்ட இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதிகாலை முதலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைகடன திரண்டு வந்து பெருமாளை மனமுருக வேண்டி வழிபட்டு பெருமாள் அருள் பெற்று சென்றனர் பெருமாளுக்கு மஞ்சள் பால் இளநீர் குங்குமம் பழங்கள் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் திருமஞ்சன அபிஷேகம் செய்யப்பட்டது
பின்னர் தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது அப்போது கோவிலில் குழுமி யிருந்த ஆன்மீக பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் இறைவனை வழிபட்டனர் புரட்டாசி சனிக்கிழமை பூஜையொட்டி ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜை ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாசவரதப்பட்டாச்சரியர் என்ற கார்த்திக் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இரண்டாவது சனிக்கிழமை திருநாளை முன்னிட்டு ஏராளமான போடி நகர் மற்றும் தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆண் பெண் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று சீனிவாச பெருமாள் அருள் பெற்று சென்றனர்.