தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் பதினோறாவது மாநில மாநாடு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது..
இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி ஊர்வலம், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பறையிசைக்கலைஞர் மதுரை வேலு ஆசான் , மலேசியா டாக்டர் இருதயம் செபஸ்தியார், மக்களிசைத்தம்பதியர் செந்தில்கணேஷ் ராஜலெட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்து ஆயிரக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் கலந்து கொண்டனர். பல மூத்த கலைஞர்களுக்கு பாராட்டி மாநகர மேயர், துணை மேயர்,தஞ்சாவூர் மண்டல கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ம.ராஜாராமன் ஆகியோர் வாழ்த்தினர். இவ்விழாவை சங்கத்தலைவர் கவிஞர் வீரசங்கர் , கௌரவத்லைவர் துரை.கோவிந்நராஜு , துணைத்தலைவர் திருக்காட்டுப்பள்ளி டி.ஜெ.சுப்ரமணியம், பொதுச்செயலாளர் கருங்குயில் கணேசன், மாவட்டததலைவர் நாணல் வேல்முத்து, செயலாளர் எம்.எம்.மதி, பொருளாளர் ஜெயக்குமார் , ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள்