இலக்கியம்பட்டி பகுதியில் மூன்று மாத காலமாக குடிநீர் வரதால் காலிக்குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் உடனடியாக சரி செய்து தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி
தமிழ்நாட்டிலே மிகப்பெரிய பஞ்சாயத்தாக திகழ்ந்துவரும் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து உள்ளது இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள 15 வது வார்டில் வெங்கடேச பெருமாள் கோயில் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் பிரச்சனை உள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்து செயல் அலுவலர் உள்ளீட்டு அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு மற்றும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய வந்தபோது தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாயத்து செயலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தபோது அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கும்போது இலக்கியம்பட்டி, கீழ் மாரியம்மன் கோவில் தெரு ஜெகநாதன் கோவில் தெரு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கு போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் கழிவுநீர் கால்வாய் வேலை முறையாக தூய்மை பணி செய்வதில்லை மேலும் ப தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை என குற்றம் காட்டினார் மேலும்
இப்பகுதியில் குடிநீர் தெவைக்காக 1 மேல் நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் 2 மினி டேங்க்கும் உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கபட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காமல் இருந்துள்ளனர்அதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி பொது மக்கள் முறையிட்டுள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் தருமபுரி – சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்ய முடிவு எடுத்தோம். அதிகாரிகள் இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி வழங்கி உள்ளனர் இன்று சரி செய்ய ப்படவில்லை என்றால் நாளை மீண்டும் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்