மதுரை பூ மார்க்கெட்டில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
மதுரை மல்லி கிலோ ரூ.1000, பிச்சி ரூ.600, முல்லை ரூ.700, செவ்வந்தி ரூ.220, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1200, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.280, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.500, மரிக்கொழுந்து ரூ.80, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மல்லிகைப்பூ வரத்து சுமாராக உள்ளது
இரண்டரை டன் முதல் மூன்று டன் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை காரணமாக இந்த விலை நிலவரம் உள்ளது. நாளை பூக்களின் விலை சற்று குறைய வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் அதிகமானோர் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை காரணமாக பூ மார்க்கெட்டில் பூக்களை அதிகமாக வாங்கி செல்கின்றனர்.