கமுதி அருகே தூய மிக்கில் அதிதூதர் ஆலய தேர்பவனியில் இந்துக்கள்
முளைப்பாரி தலையில் சுமந்து ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான தூதர் மிக்கேல் அதிதூதர் ஆலய தேர்பவனி விழா கடந்த வாரம் கொடியேற்றப்பட்டு சிறப்பு திருப்பலியுடன் துவங்கியது. பின்னர் தினமும் திருவிழா திருப்பலி மற்றும் சிறப்பு பிராத்தனை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று இரவு மிக்கேல் அதிதூதர் தேர்பவனி விழா மலர்
மாலைகள் மற்றும் மின்னொளி அலங்காரம் தேரில் நடைபெற்றது.

இக்கிராமத்தில் உள்ள இந்துக்கள் மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த தேர் பவனி விழாவில் கலந்து கொண்டு, தேர்பவனி முன்பு முளைப்பாரி தலையில் சுமந்து சென்றனர்.

வானவேடிக்கை பேண்டு வாத்தியங்களுடன் இந்த தேர்பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் போது வழிநெடுகிலும் உள்ள இந்துக்கள் மாலை மற்றும்
உப்பு, பொறி கொண்டு வழிபட்டனர்.

தேவ ஆலயத்திற்கு சென்ற பின்பு கிறிஸ்தவர்களுடன், இந்துக்களும் கூட்டு வழிபாடு பிரார்த்தனையில் பங்கேற்றனர் இதில் கமுதி, மதுரை, மூக்கையூர், தங்கச்சிமடம், ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *