கம்பம் நகரில் தனியார் வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்த தேனி எம் பி தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகரின் மையப் பகுதியான வேலப்பர் கோவில் தெருவில் ஏராளமான வணிக நிறுவனங்கள் தனியார் ஆஸ்பத்திரிகள் அரசு மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தனியார் மளிகை கடையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது . சாதாரணமாக பரவிய தீ கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து மளிகை கடை அடியோடு நாசமானது இது குறித்து மளிகை கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு கம்பம் நகர தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மக்கள் நெருக்கடி மிகுந்த வேலப்பர் கோவில் தெருவில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் விலைமதிப்பற்ற மனித உயிருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை மளிகை கடை மட்டும் முழுவதும் எரிந்து நாசமானது இது குறித்து தகவல் அறிந்த தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டும் சேதம் மதீப்பிடுகள் குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் கடை உரிமையாளரிடம் கேட்டறிந்து கடை உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார் உடன் துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் மனித நேயர் பண்பாளர் தொழிலதிபர் டாக்டர் எம். வேல்பாண்டியன் தேனி மதிமுக மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கே. இராமகிருஷ்ணன் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.