சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் கோ.கோ போட்டியில் தமிழக முதலமைச்சர் கோப்பை வெற்றி பெற்ற நிலையில் உ.பி மாநிலம், அயோத்தியில் நடைபெற்ற தேசிய அளவில் போட்டியில் பங்கேற்றனர், இதில் ஆந்திர, கர்நாடக, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநில அணிகளுடன் விளையாடிய அவர்கள் 17 வயதுகுள் உள்ளவர்கள் போட்டியில் தங்கப்பதக்கமும், 14 வயதுகுள் உள்ளவர்கள் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்று தமிழகத்திற்கு பெருமைசேர்ந்த நிலையில் சென்னை திரும்பினார்கள்,
அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பள்ளி சார்பாகவும் பெற்றோர் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்,
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கோ.கோ.விளையாட்டு மாணவிகள் அனுஷ்கா, பிரித்திவி பேசும்போது:- கோ.கோ விளையாட்டுக்கு பள்ளி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையில் ஊக்குவித்தாலும் கல்லூரி அளவில் தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும், அதுபோல் நாட்டிகாக தமிழ்கம் சார்பில் விளையாடி பதக்கம் வெள்ள தற்போது மேட் கோர்ட் உள்ள பயிற்சி அரங்கம் தேவைப்படுகிறது இதுபோல் குறைகளை அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திட வேண்டும் என கோரிக்கையாக தெரிவித்தனர்.