பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம்!-காவலர் உடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
துவரங்குறிச்சி மதுரை நெடுஞ்சாலை செல்லும் சாலையில் துவரங்குறிச்சி தனி கிராய் குளம் கிழக்கு பக்கம் சுடுகாடு அருகில் சிவப்பு நிறம் உடைய பச்சை தூண்டு சிவப்பு காவி வேஷ்டி அணிந்த சுமார் 50- 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து நிலையில் கிடந்தார். திருச்சி துவரங்குறிச்சி காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கையில், இறந்த நபர் பெயர் , முகவரி ஏதும் தெரியவில்லை. பிரேதத்தை அடையாளம் காணும் பொருட்டு மணப்பாறை அரசு மருத்துவமனை அமரர் அறையில் வைக்கப்பட்டது.
மேற்படி நபர் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை துவரங்குறிச்சி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.