இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்ப்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம் என்ற தலைப்பில் 5.5 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. சுமார் 5.5 கிலோமீட்டர் தொடர் நீளம் கொண்ட மாரத்தனானது கோவை வ உ சி மைதானத்தில் தொடங்கி அண்ணா சிலை சந்திப்பு வழியாக பந்தய சாலையை சுற்றி இறுதியில் வ உ சி. மைதானத்தில் நிறைவுற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாரத்தனை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி நிறுவன அறங்காவலர் சரஸ்வதி கோவை மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி ஜகதீஸ்வரி, மற்றும் ரமேஷ் சந்திரகுமார், தலைவர், SKAL கிளப் கோயம்புத்தூர் ஆகியோர் கலந்து கொண்டு, பொருளாதார வளர்ச்சியையும் பண்பாட்டு ஒற்றுமையையும் மேம்படுத்துவதில் சுற்றுலாவின் முக்கிய பங்கு வகிப்பதைக் எடுத்து உரைத்தனர்
மாரத்தான் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றதுடன். விருந்தோம்பல் துறை சார்ந்தவர்களும் மற்றும் SKAL உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வு ஆரோக்கியம். ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மை என்ற செய்தியைப் பரப்பியதுடன், பொறுப்பான சுற்றுலா நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.