கமுதியில் இலவச கண்சிகிச்சை முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கெளரவ உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்,சர்வோதயா அறக்கட்டளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.
இதில் கண்ணீர் அழுத்த நோய், கண்புரை கிட்ட பார்வை, தூரப்பார்வை, மாலைக்கண் நோய் உட்பட பல்வேறு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 46 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை அனுப்பி வைக்கப்பட்டனர்.சர்வோதயா அறக்கட்டளை திட்ட அலுவலர் சாத்தையா இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.சர்வோதயா அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் இருந்து பணிகளை மேற்கொண்டனர்