ஸ்ரீமத் பாகவதம் புராண கதை பாத்திரங்களின் பெயர்கள் மற்றும் பாத்திரங்களை வரைந்த கோவை சகோதரர்கள்
21 மணி நேரத்தில் ஆல்பமாக உருவாக்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இணைந்து ஸ்ரீ மத் பாகவத புராணத்தில் வரும் பெயர்கள் மற்றும் பாத்திரங்களை 21 மணி நேரத்தில் ஒரே ஆல்பமாக உருவாக்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்…
கோவை, தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர், சங்கீதா தம்பதியர். இவர்களின் மூத்த மகன் பிரணவ், இளைய மகன் பிரித்திவ்.இருவரும் தனித்தனியே சிறு வயது முதலே பல்வேறு சாதனைகளை செய்து கவனம் ஈர்த்து வருகின்றனர் இந்நிலையில் இருவரும் இணைந்து வியாசர் எழுதிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு அவதாரங்கள், லீலைகள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நூலான ஸ்ரீமத் பாகவதம் நூலை அடிப்படையாக வைத்து புதிய உலக சாதனை செய்து கவனம் ஈர்த்துள்ளனர்..
அதன் படி, ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் பல்வேறு கதை பாத்திரங்களான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது அவதாரங்களான ராம, வராஹ, நரசிம்மர் போன்றோர், மற்றும் அவர்களது பக்தர்கள், முனிவர்கள், மற்றும் ராட்சசர்கள் போன்றோர்களின் பாத்திரங்களின் ஓவியங்களை பிரணவும்,பாத்திரங்களின் பெயர்களை பிரித்திவும் இணைந்து 21 மணி நேரத்தில் ஒரே ஆல்பமாக உருவாக்கி,நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்..
இருவரது சாதனையை நேரடியாக கண்காணித்த நோபல் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் சகோதரர்கள் இருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்..
இந்நிகழ்ச்சியில் சாதனை மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் என பலர் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகபடுத்தினர்..