மீண்டும் மஞ்சள் பை ” விழிப்புணர்வு பேரணி பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. ஆறாம் நாள் நிகழ்வான இன்று 01.10.2025 “ மீண்டும் மஞ்சள் பை “ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் அ.ஷாஜஹான் அவர்கள் தலைமை தாங்கினார்கள், முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் அ.செல்வராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பேரூராட்சி மன்ற பணியாளர் ராஜேஷ் அவர்கள், கிராம முக்கியஸ்தர் செல்வகுமார், முதுகுளத்தூர் பேரூராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் (திடக்கழிவு மேலாண்மை) எஸ்.கண்ணன், ஆசிரியர் ராயப்பன், தாஹிர் ஹுசைன், சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் அ.ஷாஜஹான் அவர்கள் மீண்டும் மஞ்சள்பை விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்தார்கள். அதன் பின்னர் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மு.வாகைக்குளம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் சென்று பொது மக்களிடம் மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் பொது மக்கள் அனைவருக்கும் மஞ்சள் பை விநியோகிக்கப்பட்டது. மேலும் ஊர் பொது மக்கள் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன்பிறகு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டார்கள். இந்த நிகழ்வுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். உழவார பணிகளில் ஈடுபட்டனர்.