மதுரை, மீனாட்சி பஜாரில் இயங்கி வந்த மொபைல் விற்பனை கடைகளில் ஐந்து
தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்ததும் மூன்று தீயணைக்கும் வண்டிகள் விரைந்து வந்து தீயை மேலும் பரவ விடாமல் தீயணைப்பு படை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் சேதமடைந்த கடைகளை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார்,மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன், போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா ஆகியோர் பார்வையிட்டனர்.